search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி படம்"

    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது என கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட், படத்துக்கான தடையை நீக்க முடியாது என கூறியுள்ளது. #SupremeCourt #PMModiMovie
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.



    மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு  சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #PMModiMovie


    பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது. #PMNarendraModi #ModiBiopic
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.
     
    23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.

    ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறினர்.

    இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. எனவே, படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில், பிஎம் நரேந்திரமோடி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.



    பிஎம் நரேந்திரமோடி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழே தராத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    பிஎம் நரேந்திர மோடி படம் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #ModiBiopic
    ×